search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதையல் வேட்டை"

    • இந்த படத்தின் விளம்பர முன்னோட்டமாக ஒரு வண்டியில் படத்தில் வரும் பள்ளிகொண்ட கிருஷ்ணர் சிலை ரதம் போல் அமைக்கப்பட்டு அந்த ரதத்தில் மாயோன் பட விளம்பரங்கள் அமைக்கப்பட்டு 40 நாட்கள் தமிழகம் முழுவதும் வலம் வர முடிவு செய்யப்பட்டது.
    • பண்டைய தமிழர்களின் ஆன்மீக அறிவியலும் சிறுவர்களுக்கு பிடித்த அறிவியல் மாயாஜாலங்களும் இந்த படத்தில் உள்ளதால் அனைத்து வயதினரையும் நிச்சயம் ஈர்க்கும்.

    தஞ்சாவூர்:

    நடிகர் சிபிராஜ் - தான்யா ரவிச்சந்திரன் ஜோடியாக நடித்துள்ள படம் மாயோன். இந்த படத்தை அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து உள்ளார். கிஷோர் இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

    இதில் கே.எஸ்.ரவிகுமார், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். புத்தம் புதிய களத்தில் கடவுள், அறிவியல், சிலை கடத்தல், புதையல் வேட்டை என பரபர திகில் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தின் விளம்பர முன்னோட்டமாக ஒரு வண்டியில் படத்தில் வரும் பள்ளிகொண்ட கிருஷ்ணர் சிலை ரதம் போல் அமைக்கப்பட்டு அந்த ரதத்தில் மாயோன் பட விளம்பரங்கள் அமைக்கப்பட்டு 40 நாட்கள் தமிழகம் முழுவதும் வலம் வர முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இந்த ரதம் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று நேற்று திருச்சிக்கு சென்று அடைந்தது. இந்த நிலையில் இன்று திருச்சியிலிருந்து தஞ்சை பெரிய கோவிலுக்கு ரதம் வந்தது.இதை அறிந்த பொதுமக்கள், பெரிய கோவிலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் ரதத்தை பார்வையிட்டு கிருஷ்ணர் சிலையைக் கண்டு ரசித்து தரிசனம் செய்தனர். மேலும் சிலை அருகே நின்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். எடுக்கப்பட்ட புகைப்படங்களை உடனுக்குடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.இதுகுறித்து பட தயாரிப்பாளர் அருள்மொழி மாணிக்கம் கூறும்போது,

    "மாயோன் ரதம், தமிழகமெங்கும் யாத்திரையாக வலம் வந்து கொண்டு இருக்கிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மாயோன் பள்ளிகொண்ட கிருஷ்ணரை வணங்கி வருகின்றனர். வருகிற 30-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் இந்த ரதம் சுற்றி வருகிறது. இது உள்ள கிருஷ்ணர் சிலை 12 அடி நீளம் , ஆறரை அடி அகலம் உடையது. தமிழகத்தில் ஆன்மீக அறிவியலை கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தின் சுவாரசியமான கதையாக இருக்கும்.

    பண்டைய தமிழர்களின் ஆன்மீக அறிவியலும் சிறுவர்களுக்கு பிடித்த அறிவியல் மாயாஜாலங்களும் இந்த படத்தில் உள்ளதால் அனைத்து வயதினரையும் நிச்சயம் ஈர்க்கும். தொல்பொருள் ஆராய்ச்சியாளராக வரும் நடிகர் சிபிராஜ் , கதாநாயகி தான்யாவுக்கும், கோவில் அறங்காவலராக வரும் ராதாரவிக்கும் இடையே நடக்கும் நவீன அறிவியலா? ஆன்மீகமா? போட்டி மக்களை சுவாரசியபடுத்தும். மக்கள் மத்தியில் மாயோன் திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வருகிற 24-ம் தேதி தமிழகம் மற்றும் உலகமெங்கும் இப்படம் வெளியாகிறது" என்றார்.

    ×